ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணிகள் பேரணிகள் நடத்துவதால் மும்பையில் இன்று வாகன போக்குவரத்துக்கு கட்டுபாடுகள் விதிப்பு: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

மும்பை: தசாராவை முன்னிட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியினரும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியினரும் இன்று வெவ்வேறு பேரணி நடத்துகின்றன. உத்தவ் தாக்கரே அணியினர் சிவாஜி பார்க்கில் பேரணி நடத்துகின்றனர். ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாந்த்ரா குர்லா காம்பிளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி. மைதானத்தில் பேரணி நடத்துகின்றனர். இதனால் மும்பையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்த நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் மும்பையில் இன்று வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

எம்.எம்.ஆர்.டி.ஏ.மைதானத்தில் நடக்கும் பேரணி தொடர்பாக கீழ் கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன். இந்த கட்டுப்பாடு இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.  

1. இதன் படி எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்துக்கு செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பேரணிக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தாராவி, மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, ஒர்லி கடல் பாலம் ஆகியவற்றில் இருந்து வரும் வாகனங்கள் பாந்த்ரா குர்லா குடும்ப நீதிமன்றம் வழியாக குர்லா செல்வதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது.

2. செயின்ட் தியானேஷ்வர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பாந்த்ரா குர்லா, வருமான வரித்துறை அலுவலக ஜங்ஷன் வழியாக குர்லா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

3. அரசு காலனி, கனக்கியா மற்றும் வால்மீகி நகரில் இருந்து வரும் வாகனங்கள்,  பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் வழியாக குர்லா பாலஸ் மற்றும் சுண்ணாபட்டி செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

4. சுர்வே ஜங்ஷன் மற்றும் ரசாக் ஜங்ஷனில் இருந்து வரும் வாகனங்கள், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகம் வழியாக தாராவி, மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை மற்றும் ஒர்லி கடல் பாலத்துக்கு செல்லவும் அனுமதிக்கப்படமாட்டாது.

5. பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில், தெற்கு நோக்கி செல்லும் சாலையை பயன்படுத்தி, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் இருக்கும் சுண்ணாபட்டி வழியாக, கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது.

6. பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் வாகன நிறுத்தத்துக்கு முன்பு விதிக்கப்பட்ட தடை, இரவு 2 மணிக்கு பின்னர் நீக்கப்படும்.

வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள சாலைகள்

1. சித்திவினாயகர் மந்திர் ஜங்ஷனில் இருந்து மாகிம் கபட் பஜார் ஜங்ஷன் வரை எஸ்.வி. ரோடில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழியாக வாகனங்கள் சித்திவினாயகர் ஜங்ஷன், எஸ்.கே.போலே ரோடு, அகர் பஜார், போத்துகேயர் சர்ச், மற்றும் கோகலே சாலை வழியாக செல்லலாம்.

2.  ராஜா படே சவுக் ஜங்ஷனில் இருந்து தாதர் கேலுஸ்கர் மார்க்(வடக்கு) வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

மாற்று வழியாக வாகனங்கள் எல்.எல்.ஜே.ரோடு, ஸ்டீல் மான் ஜங்ஷன் வழியாக சென்று பின்னர் கோகலே ரோட்டுக்கு செல்லலாம்.

3. பாண்டுரங் நாயக் மார்க்கில் உள்ள லெப்டினண்ட் திலீப் குப்தே ரோடு ஜங்ஷனில் இருந்து வாகனங்கள் தெற்கு நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

மாற்று வழியாக வாகனங்கள் ராஜா படே ஜங்ஷன் வழியாக எல்.ஜே. ரோடுக்கு செல்லலாம்.

4. கட்கரி சவுக் ஜங்ஷனில் இருந்து தாதர் கேலுஸ்கர் ரோடு வரை(தெற்கு) வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.  

மாற்று வழியாக வாகனங்கள் பி.எம்.ராவுத் மார்க் வழியாக செல்லலாம்.

5. சேனாபதி பபட் சிலையில் இருந்து கட்கரி ஜங்ஷன் வரை தாதாசாகேப் ரேகே ரோடில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

6. பத்மாபாய் தக்கர் மார்க் ஜங்ஷனில் இருந்து மாகிம் எல்.ஜே. மார்க் வரை பால் கோவிந்தர் மார்க்கில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் இந்த அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

சிவாஜி பார்க் பேரணியை முன்னிட்டு கீழ்கண்ட சாலைகளில் வாகன போத்துவரத்துக்கு பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

சித்தி வினாயகர் மந்திரில் இருந்து யெஸ் வங்கி வரை எஸ்.வி.சாலை, கேலுஸ்கர் தெற்கு மற்றும் வடக்கு சாலை, தாதர் எம்.பி.ராவுத் மார்கில்(எஸ்.வி.எஸ். ரோடு அதன் ஜங்ஷினில் இருந்து) ஆகிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. பாண்டுரங் நாயக் மார்க்(எம்.பி.ராவுத் ரோடு), தாதர் தாதாசாகேப் ரேகே மார்க்(சேனாபதி பபட் சிலையில் இருந்து கட்கரி ஜங்ஷன் வரை), லெப்டினண்ட் திலீப் குப்தே மார்க்(சிவாஜி பார்க் கேட் எண்.4ல் இருந்து சீத்தலாதேவி கோயில் ஜங்ஷன் வரை) வாகனங்களை நிறுத்தக் கூடாது. என்.சி. கேல்கர் மார்க்(கட்கரி ஜங்ஷனில் இருந்து அனுமன் கோயில் ஜங்ஷன் வரை), தாதர் எல்.ரோடு, ராஜாபாடே சிக்கனில் இருந்து கட்கரி ஜங்ஷன் வரையும் வாகனங்களை நிறுத்தத் கூடாது.

Related Stories: