×

ஒன்றிய அமைச்சர் தகவல் 200 ரயில் நிலையம் நவீனமாக்கப்படும்

அவுரங்காபாத்: ‘நாடு முழுவதும் 200 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும்’ என்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில், ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி கூறுகையில், ‘‘200 ரயில்நிலையங்களை மறுசீரமைப்பதற்கான திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.

ரயில்நிலையத்தின் மேல் தளத்தில் ஓய்வறைகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள் உள்பட உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்படும். பிராந்திய பொருட்களை விற்பனை செய்யும் தளமாகவும் ரயில் நிலையங்கள் செயல்படும். எதிர்காலத்தில் நாட்டில் 400 வந்தே பாரத் உருவாக்கப்படும். இவற்றில் 100 ரயில்கள் மரத்வாடாவில் உள்ள லத்தூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இதற்கு தேவயைான மாற்றங்கள் தொழிற்சாலையில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் நெடுஞ்சாலைகள் அலலது ரயில்வே மூலமாக இணைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.


Tags : Union Minister ,200 Railway Station , Union Minister informs 200 railway station will be modernized
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...