சிறுபான்மை நலத்துறையை நீக்க திட்டமா? ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை நீக்குவதற்கான திட்டம்  எதுவும் பரிசீலனையில் இல்லை என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை ரத்து செய்துவிட்டு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘அதுபோன்ற முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.  சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.

Related Stories: