மயிலாப்பூர், அடையாறு கோட்டங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: 6ம் தேதி நடக்கிறது

சென்னை: மயிலாப்பூர் மற்றும் அடையாறு கோட்டங்களில் வரும் 6ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது, என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மயிலாப்பூர் கோட்ட மின் நுகர்வோர்  குறைதீர் கூட்டம் வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு செயற்பொறியாளர்  அலுவலகம், எண்.97, எம்.ஜி.ஆர் சாலை, (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை) மெட்ரோ  குடிநீர் நிலையம் அருகில், சென்னை-34 என்ற முகவரியில் நடக்கிறது. இதேபோல், அடையாறு கோட்ட மின் நுகர்வோர்  குறைதீர் கூட்டம் வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு செயற்பொறியாளர்  அலுவலகம், வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு,  வேளச்சேரி, சென்னை-42’ என்ற முகவரியில் நடக்கிறது.   

* எழும்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 7ம் தேதி காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம்,  எண்.47, மலையப்பன் தெரு, ஓட்டேரி,  சென்னை-12 என்ற முவகரியில் நடக்கிறது. ஆவடி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 7ம் தேதி காலை 110 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம்,  1வது  தளம், எண்.229, என்.எம் ரோடு, ஆவடி, சென்னை-54 என்ற முகவரியில் நடக்கிறது.

 * பெரம்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 7ம் தேதி காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம், பெரம்பூர் 110 கி.வோ செம்பியம் துணை மின் நிலைய வளாகம், எம்.ஈ.எஸ் ரோடு, சென்னை-11 (சிம்சன் கம்பெனி லிமிடெட் எதிரில்) என்ற முகவரியில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: