சென்னையில் 6ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்: தமிழ் உணர்வாளர்களுக்கு வைகோ அழைப்பு

சென்னை: இந்தி வெறிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் சென்னையில் 6ம்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சார்பில், இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 6ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அமித்ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு, போக்குக்குக் கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் 6ம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. இதில் தமிழ் உணர்வாளர்களும், மதிமுகவினரும் திரளாகக் கலந்து கொள்ள அழைக்கிறேன்.

Related Stories: