உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏ மரணம்

புவனேஸ்வர்: பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா இன்று புவனேஸ்வரில் காலமானார். ஒடிசா மாநிலம் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா (65) என்பவர் கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த பிஜய் ரஞ்சன் சிங் பரிஹாவுக்கு மனைவி திலோத்தமா சிங் பரிஹா, மகள்கள் பர்ஷா சிங் பரிஹா, கடம்பினி சிங் பரிஹா மற்றும் மகன் போஜ்ராஜ் சிங் பரிஹா ஆகியோர் உள்ளனர். பிஜய் ரஞ்சன் சிங் பரிஹாவின் உடல் அவரது சொந்த ஊரான படம்பூரில் இன்று நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: