பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கிய தங்க கவசத்துக்கு உரிமை கோரி வங்கியில் ஓபிஎஸ் மனு..!

சென்னை : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கிய தங்க கவசத்துக்கு உரிமை கோரி வங்கியில் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார். அக்டோபர் 30-ம் தேதி குருபூஜை நடைபெறுவதை ஒட்டி தங்க கவசத்துக்கு உரிமை கோரி செப்டம்பர் 16-ல் மனு அளிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-ல் ரூ.3.17 கோடி மதிப்பில் 13 கிலோ எடை உள்ள தங்க கவசம் தந்தார். தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குருபூஜையின் போது அதிமுக சார்பில் தேவர் தங்க கவசம் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து பூஜை முடிந்த பின் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்த வருட அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கடந்த வாரம் தேவர் தங்க கவசத்தை பெற உரிமை கோரி கடிதம் மற்றும் அதற்கான ஆவணங்களை வங்கியில் சார்பித்தார். மேலும், தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. கொடுக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு தனியார் வங்கி நிர்வாகம், தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி அது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கிய தங்க கவசத்துக்கு உரிமை கோரி வங்கியில் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.

Related Stories: