×

கோவையில் 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

கோவை: கோவையில் குறைந்த பட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஊதியம் வழங்கப்பட்டததால் தூய்மை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்துடன் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் கோவை மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். 2-வது நாளான இன்று அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பணிபுரியும் தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் இணைந்தனர். கோவை ஆட்சி அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முகம் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் ஆட்சியர் சமீரனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தூமை பணியாளர்கள் பணிக்கு வராததால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். 


Tags : Coimbatore, cleanliness, workers, protest, wages, promotion, demand, insistence
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது