டெல் அவிவ் டென்னிஸ் போட்டி: 50 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் குரேஷிய வீரரை வீழ்த்தி வெற்றிக்கோப்பையை கைப்பற்றினார் ஜோகோவிச்

இஸ்ரேல்: இஸ்ரேலில் நடைபெற்று வந்த டெல் அவிவ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், வெற்றி கோப்பையை தட்டிச் சென்றார். டெல் அவிவ் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜோகோவிச், குரேஷி வீரர் மாரின் சிலிக்கை எதிர்கொண்டு விளையாடினார். ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி சர்வேஸுகள் மூலமாக ஜோகோவிக் ஆதிக்கம் செலுத்தினார்.

இதனால் 50 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் முதல் 2 செட்களையும் கைப்பற்றி மாரின் சிலிக்கை எளிதில் வீழ்த்தினார் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நோவக் ஜோகோவிச்க்கு வெற்றிக்கோப்பை பரிசீலிக்கப்பட்டது. இது நோவக் ஜோகோவிச் கைப்பற்றியிருக்கும் 89-வது டைட்டில் ஆகும். டெல் அவிவ் டென்னிஸ் போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் நோவக் ஜோகோவிச் கஜகஸ்தானில் இன்று தொடங்கும் அஸ்தானா ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்கிறார்.

Related Stories: