×

விருதுநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்-உண்மையான அதிகாரம் மக்களிடம் உள்ளது என டிஆர்ஓ பேச்சு

விருதுநகர் : அரசு அலுவலர்கள் அனைவரும் மக்களின் பணியாளர்கள், அவர்களுக்கான அதிகாரம் மக்களிடம் பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது என சத்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் டிஆர்ஓ ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. சாத்தூர் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டம் டிஆர்ஓ ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் டிஆர்ஓ பேசுகையில், ‘அரசு அனைத்து மக்களையும் சமமாக பார்த்து, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தரும் ஒரு அமைப்பாகும். கிராமசபையின் முக்கிய நோக்கம், ஜனநாயக நாட்டில் கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இருப்பர்.
அரசு அலுவலர்கள் அனைவரும் மக்களின் பணியாளர்கள்.

எங்களுக்கான அதிகாரம் மக்களிடம் இருந்துதான் பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது. அதனடிப்படையில் கிராமசபை கூட்டத்தின் மூலம் கிராம வளர்ச்சிக்கு தேவையான பணிகளை, அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தேவையான பணிகள் என்ன என்பதை கிராம மக்கள் மூலம் அறிந்து அதை செயல்படுத்துவது தான் கிராம சபையின் நோக்கம்.

ஒரு ஊரோ, நாடோ வளர்ச்சி அடைய அரசு நினைத்தால் மட்டும் போதாது. பொதுக்களின் பங்களிப்பும் முக்கியம். நாட்டின் வளர்ச்சி கிராம வளர்ச்சியை அடிப்படையாக கொண்டுள்ளது. கிராமங்களை ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு வீடும் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்காகதான் ‘நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து உயர்ல்வி பயிலும் மாணவர்களை ஊக்கப்படும் வகையில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன், கோட்டாட்சியர் அனிதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

காரியாபட்டி

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை நடைபெற்றது. கல்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்றத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பற்றாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிசிண்டி ஊராட்சியில் தலைவர் ராஜேஸ்வரி பெருமாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கிராமத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடுக்கண் குளத்தில் சாந்தி வாலை முத்துச்சாமி தலைமையிலும், தோணுகால் ஊராட்சியில் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அய்யாவு முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கலைச்செல்வி தீர்மானம் வாசித்தார். வக்காணங்குண்டு தேவிசூசை தலைமையிலும் கிராமசபை நடைபெற்றது. நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உழக்குடி ஊராட்சியில் தலைவர் ராஜம்மாள் தலைமையில், கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சியில் காரியாபட்டி. நரிக்குடி ஒன்றிய பகுதிகளில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

முகவூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்:

ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில், மாவட்ட பார்வை தடுப்பு சங்கம் மற்றும் சக்தி கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண்சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமை தனுஷ்.எம்.குமார் எம்பி, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து முகவூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மரக்கன்று நட்டனர். பின்னர் முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர்.

தனுஷ்.எம்.குமார் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர். இதற்கு எம்பியும், எம்.எல்.ஏவும், ஆணையாளர் மூலம் கோரிக்கைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரவிக்குமார், செட்டியார்பட்டி சேர்மன் ஜெயமுருகன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Gram Sabha ,Gandhi ,Jayanti ,Virudhunagar district ,TRO , Virudhunagar: All government officials are people's employees, their authority is derived from the people. Real authority
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...