×

கொருக்கையில் கிராமசபை கூட்டம் குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டி : கொருக்கை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம். திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கூட்டப் பொருள் பற்றி விவாதிக்கபட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர், கிராம சபா உறுப்பினர்கள் , பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர், மகளிர் குழுவினர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆகியோர் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலக்குழுவின் சார்பில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், ஆதரவற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, சிறுவர் மற்றும் சிறார்களுக்கான இல்லங்கள், மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலகின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான வாழ்வாதார உதவிகள் இயற்கை மற்றும் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தடையற்ற கல்வி மற்றும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், தாய் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் ஆகியவை குறித்து எடுத்து கூறப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில் ஊராட்சி செயலர் தமிழ் இலக்கியா நன்றி கூறினார்.

Tags : Korea , Tirutharapoondi: Awareness was created about child marriage and POCSO Act in the village council meeting held in Korukai panchayat.
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...