×

விழுப்புரத்தில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்-பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

விழுப்புரம் : ஆயுதபூஜையையொட்டி விழுப்புரத்தில் அலங்காரம், தோரணம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.தமிழகத்தில்  நாளை 4ம் தேதி ஆயுத பூஜை, 5ம் தேதி விஜயதசமிவிழா கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கி உள்ளனர்.  இதனால் விழுப்புரம், வளவனூர் உள்ளிட்ட நகரபகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம்  அலைமோதியது. பூ, பழம், காய்கறிகள், கரும்பு, சுண்டல், வெல்லம், சர்க்கரை  போன்றவற்றின் விற்பனை விழுப்புரத்தில் களைகட்டியது.

சரஸ்வதி பூஜை, ஆயுத  பூஜைக்கு வீடு, கடை மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து அலங்காரம் செய்து  பூஜை செய்வது வழக்கம்.  இந்நாளில் தொழில் கருவிகளை தூய்மை செய்து பூஜை  செய்வர். மேலும் கல்வி நிறுவனங்களில் விஜயதசமி தினத்தில் மழலைகளின்  சேர்க்கையும் நடைபெறும். பூஜைகளுக்கு தேவையான திருஷ்டி பூசணிக்காய்,  மாவிலை, சிறிய வாழை
மரங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள், விழுப்புரம் நகரில் பல  இடங்களில் சாலையோரம் வைத்து விற்பனை செய்யயப்பட்டது.

Tags : Ayudha Pooja ,Villupuram Padujor , Villupuram: On the occasion of Ayudha Puja, there was a brisk sale of items such as ornaments and postures in Villupuram. Tomorrow in Tamil Nadu.
× RELATED சென்னையில் ஆயுதபூஜை சிறப்பு பஸ்...