×

தமிழகத்தில் களைகட்டும் ஆயுதபூஜை விற்பனை: விலையை பொருட்படுத்தாமல் பொரி, பழங்களை வாங்கும் மக்கள்

சென்னை: ஆயுதபூஜை நாளை கொண்டாடப்படுவதால் அதற்கான பூஜை பொருட்களின் விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் நாளை ஆயுதபூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்பபிடுகிறது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட திருவிழாக்கள் மீண்டும் வழக்கமான உற்சாகத்திற்கு மாறி வருகின்றன. மக்களும் திருவிழாக்களை கோலாகலத்துடன் கொண்டாட துவங்கியுள்ளனர். அந்தவரிசையில் ஆயுதபூஜை பண்டிகையும் உற்சாகத்துடன் அவர்க்ஜல் எதிர்நோக்கி உள்ளனர். இதற்கு தேவையான பொரி, கடலை, அவல் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடைவீதி, சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நாகர்கோவிலில் பூஜை பொருட்கள் மற்றும் பழங்களை வாங்க மக்கள் கடைவீதியில் திரண்டனர். அதேநேரத்தில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. சீசன் இல்லாததால் மாம்பழம் 1கிலோ ரூ.250-க்கும் விற்கப்படுகிறது. சென்னையிலும் ஆயுதபூஜை விற்பனை களைகட்டியுள்ளது. கோயம்பேடு அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆயுதபூஜை பொருட்களை மக்கள் வாங்கி செல்கின்றனர். பூஜை பொருட்கள் மற்றும் பழங்களின் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பண்டிகை என்பதால் விலை அதிகமாக இருந்தாலும் வேறுவழியின்றி பொருட்களை வாங்கும் நிலை இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் ஆயுதபூஜை விற்பனை களைகட்டியுள்ளது. 


Tags : Tamil Nadu , Tamil Nadu, Ayudha Puja, Price, Pori, Fruit, People
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...