வெப்பன் படத்தில் சத்யராஜ், வசந்த் ரவி

சென்னை: மில்லியன் ஸ்டுடியோ எம்.எஸ்.மன்சூர் வழங்க, ஏ.குகன் சென் னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிக்க உள்ள ஆக்‌ஷன் திரில்லர் படம், ‘வெப்பன்’. இந்தப் படத்தின் ஷூட்டிங் மலைப்பிரதேசங்களில் நடக்கிறது. பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

இதற்கு முன்பு பாபி சிம்ஹா, பார் வதி நாயர் நடித்த ‘வெள்ளை ராஜா’ என்ற வெப்தொடரை ஓடிடி தளத்துக்காக ஏ.குகன் சென்னியப்பன் இயக்கி இருந்தார். பிறகு ‘சவாரி’ என்ற சைக்கோ திரில்லர் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். ‘வெப்பன்’ படத்தின் டைட்டில் லுக், சத்யராஜ் பிறந்தநாளான இன்று வெளியிடப்படுகிறது.

Related Stories: