×

அமெரிக்காவில் வாக்களிக்க எனக்கு உரிமை இல்லை: பிரியங்கா வருத்தம்

வாஷிங்டன்: முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், இமான் இசையில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். பிறகு பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய அவர், தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்தொடரில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இதனால், அமெரிக்காவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா வாங்கி, அங்கு தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் மகள் மால்டி மேரியுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சா வளியுமான கமலா ஹாரிஸை பிரியங்கா சோப்ரா சந்தித்தார்.

வாஷிங்டனில் நடந்த ஜனநாயக தேசியக்குழு (டிஎம்சி) மகளிர் மன்றத்தில் அவர்களின் சந்திப்பு நடந்தது. பிறகு இதுதொடர்பான போட்டோக்களை வெளியிட்டுள்ள பிரியங்கா சோப்ரா கூறியதாவது: அமெரிக்காவில் வாக்களிக்க எனக்கு உரிமை இல்லை. என் கணவர் நிக் ஜோனாஸ் வாக்களிக்க முடியும். எதிர்காலத்தில் மால்டி மேரி அமெரிக்காவில் வாக்களிப்பார்.
இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி முதல் இன்றைய ஜனாதிபதி திரவுபதி முர்மு வரை முக்கியமான  முடிவுகள் எடுக்கும் இடங்களில் பெண்கள் இருக்கிறார்கள். எனவே, பெண்கள்  விதிவிலக்காக இருக்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் உலக மக்கள் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டார்கள். அதிலிருந்து மீள்வதற்கும் கடுமையாகப்  போராடி வருகிறார்கள்.

Tags : America ,Priyanka , I don't have the right to vote in America: Priyanka regrets
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...