விஜய் படம் குறித்து இயக்குனர் புது தகவல்

சென்னை: தமிழில் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களை இயக்கியவர், லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. விஜய் நடிக்கும் 67வது படத்தை அவர் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து மீண்டும் அவர்கள் இணையும் படம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது விஜய்யின் 66வது படமாக ‘வாரிசு’ உருவாகிறது. இது வரும் பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வருகிறது. வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த பட ஸ்கிரிப்ட் பணிகளுக்காக சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ‘விஜய்யின் 67வது படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும். இவ்வளவு நாட்கள் காத்திருந்த ரசிகர்கள், இன்னும் சில நாட்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருப்புக்கான அப்டேட் அசத்தலாக வெளியாகும்’ என்று உறுதி அளித்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: