இந்திய அணிக்கு தவான் கேப்டன்: ரோகித், கோஹ்லிக்கு ஓய்வு

புதுடெல்லி: தென் ஆப்ரிக்க அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அடுத்து இரு அணிகளும் ஒருநாள் தொடரில் மோத உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஷிகர் தவான் தலைமையிலான அணியின் மொத்தம் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஷ்ரேயாஸ் அய்யர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நெருங்கிவிட்டதால் கேப்டன் ரோகித், கோஹ்லி இருவருக்கும் இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் அக். 6ம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, 2வது போட்டி ராஞ்சியிலும் (அக். 9), கடைசி போட்டி டெல்லியிலும் (அக். 11) நடக்க உள்ளன. இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர் (துணை கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில், ரஜத் பத்திதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்.

Related Stories: