×

வெளிநாட்டு சதி தொடர்பான ஆடியோ இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை: பாக். அமைச்சரவை ஒப்புதல்

இஸ்லாமாபாத்: வெளிநாட்டு சதி தொடர்பான ஆடியோ வெளியான விவகாரத்தில் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது அலுவலக அறையில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகள், ஆடியோவாக சமீபத்தில் வெளியாகி அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று இம்ரான் கானும், இதர எதிர்கட்சி தலைவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர்கள்  உமர், ஷா மஹ்மூத் குரேஷி மற்றும் அசாம் ஆகியோர், கட்சியின் தலைவரான இம்ரான்  கானுடன் அமெரிக்க சைபர்கிரைம் பற்றி பேசுவது தொடர்பாக 2 ஆடியோக்கள் வெளியாகி  உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான், அமெரிக்கா அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, வெளிநாட்டு சதி என கூறப்படும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.

Tags : Imran Khan ,Pak Cabinet , Legal Action Against Foreign Conspiracy Audio Imran Khan: Pak Cabinet approval
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு