×

வேதாரண்யத்தில் மழைக்காலம் துவங்குவதால் முடிவுக்கு வரும் உப்பு உற்பத்தி

வேதாரண்யம்: மழைகாலம் துவங்க உள்ளதால் வேதாரண்யம் பகுதியில் பகுதியில் உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் வரை 9 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யபட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கபடுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு உற்பத்தி துவங்கி முதல் செப்டம்பர் மாதம் வரை விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கபட்டது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு பிறகு தற்போது உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கபட்டது. மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க சத்தியமில்லாத நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Vedarnaya , Salt production ends with onset of rainy season in Vedharanya
× RELATED கடற்கரையில் ஒதுங்கிய 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள்: வேதாரண்யம் அருகே பரபரப்பு