சாலை பாதுகாப்பு டி.20 தொடர்; இந்தியா லெஜன்ட்ஸ் சாம்பியன்

ராய்ப்பூர்: இந்தியா, இலங்கை, வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய 8 நாடுகளின் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்துவந்தது. இதில் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியாவையும், இலங்கை வெஸ்ட்இண்டீசையும் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தன. ராய்ப்பூரில் நேற்று நடந்த பைனலில் இந்தியா லெஜன்ட்ஸ், இலங்கை லெஜன்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் குவித்தது. நமன் ஓஜா நாட் அவுட்டாக 71 பந்தில் 108 ரன் அடித்தார். கேப்டன் டெண்டுல்கர், யூசுப் பதான் டக்அவுட் ஆன நிலையில் ரெய்னா 4, யுவராஜ்சிங் 19, வினய்குமார் 36, இர்பான் பதான் 11 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய இலங்கை 18.5 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா லெஜன்ட்ஸ் 33 ரன் வித்தயாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. நமன் ஓஜா ஆட்டநாயகன் விருதும், இலங்கை கேப்டன் தில்சான் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories: