×

நத்தம் அருகே வீணாகும் குடிநீர்

நத்தம் : நத்தம் பேரூராட்சி 1வது வார்டு பகுதியைச் சேர்ந்தது பாப்பாபட்டி. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள பயன்பாட்டுக்காக பேரூராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார மோட்டார் மூலம் அங்கு கட்டப்பட்டுள்ள கான்கிரீட் மேல்தளத்தை கொண்டுள்ள தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் குழாய்கள் மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் அவற்றில் நீர் நிரப்புவர்கள், முறையாக தண்ணீர் தொட்டி நிறைந்தவுடன் மோட்டார் நிறுத்தப்படாததால் கூடுதல் நீர் வெளியேறுகிறது.  மேலும் அந்த இடத்தில் தண்ணீர் வெளியேறுவதற்கு முறையாக கால்வாய்கள் இல்லாததால் அவை தொட்டியின் கீழ் பகுதியிலேயே தங்கி தேங்கி கிடக்கிறது. இதனால் குடிநீர் தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொட்டி கட்டி பல வருடங்களாகி விட்டது. இவற்றில் விரிசல் விட்டுள்ளதால் தண்ணீர் தொட்டியில் விழும் போது அந்த விரிசல்களின் வழியாக நீர் கசிந்து வெளியேறுகிறது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பல தடவை கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த நிலையில் ஆபத்தாக உள்ள தண்ணீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய  புதிதாக தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும். மேலும் அந்த இடத்தில் வெளியேறி தேங்கும் நீரை அப்புறப்படுத்த கால்வாய் அமைத்து வெளியேற்ற வேண்டும் என்றனர்….

The post நத்தம் அருகே வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Natham ,Nattam ,Papapatti ,1st Ward ,Nattam Municipality ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...