பாதுகாப்பு கணக்குகள் துறை தினவிழா சிறந்த பணியாளர்களுக்கு பதக்கம்

சென்னை: பாதுகாப்பு கணக்குகள் துறை கடந்த 1951ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நிறுவப்பட்டது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பாதுகாப்பு கணக்குகள் தினம்  கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கமாண்டிங் அதிகாரி அருண் பங்கேற்றார். இந்த விழாவில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் வினாடி வினா போட்டி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ரத்த தான முகாம் செஞ்சிலுவை சங்கம் மூலம் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, ரத்த தானம் வழங்கினர். சிறப்பாக பணியாற்றிய 5 அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக, சென்னை அலுவலகத்தில் 25 ஆண்டுகளாக டெலிபோன் ஆபரேட்டராக பணியாற்றும் மாற்றுத்திறனாளி செல்விக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் குரலை வைத்தே 25 ஆண்டுகளாக அதிகாரிகளை தெரிந்து வைத்துள்ளார். எனவே கமாண்டிங் அதிகாரி நேரடியாக செல்விக்கு பதக்கம் வழங்கினார். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Related Stories: