வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: தென்கொரியா மற்றும் அமெரிக்கா  போர்க்கப்பல்கள் இணைந்து 4 நாட்கள் போர் பயிற்சியை மேற்கொண்டன. இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த வாரத்தில் 3 முறை சோதனை நடத்திய நிலையில் நேற்று நான்காவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது.

அந்த ஏவுகணைகள் ஜப்பானின் கடல் பகுதிக்குள் விழுந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென்கொரியா அதிபர் யூன் சுக் யியோல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: