75 ஆண்டு சுதந்திர தினம் நிறைவு மாணவர்களுக்கு கட்டுரை, குறும்பட போட்டி; தமிழக கவர்னர் அறிவிப்பு

சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக கவர்னரும், ஆரோவில் அறக்கட்டளை தலைவருமான ஆர் .என்.ரவி அறிவுறுத்தலின்படி இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையிலும், மகான் அரவிந்தரின் 150வது பிறப்பு ஆண்டுவிழா ஆகியவற்றின் நினைவாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தேசிய மற்றும் சர்வதேச அளவில் கட்டுரை மற்றும் குறும்பட போட்டிகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் அமையும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை அல்லது குறும்படத்தின் தலைப்பு: ” அரவிந்தரும்  ஆரோவில்லும்: இந்தியாவின் மேன்மைக்கு புத்தொளியூட்டுதல்” ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை அல்லது குறும்படத்தின் தலைப்பு: ‘‘ அரவிந்தரும்  ஆரோவில்லும்: மனித குலத்திற்கு இந்தியாவின் கொடை” கட்டுரைகள் 10 பக்கங்களுக்கு மிகாமல், ஒரு பக்கத்திற்கு 20 வரிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறும்படத்தின் கால அளவு 5-7 நிமிடங்கள். கட்டுரைகள் குறும்படங்கள் வருகிற 30ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  போட்டியில் பங்கேற்பவர்கள், மின்னஞ்சல்களிலும் பின்வரும் விவரங்கள் தவறாமல் இருத்தல் வேண்டும்: 1) பெயர், 2) குடியிருப்பு முகவரி, 3) கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, 4) வகுப்பு தகுதி நிலை புலம் மற்றும் 5) தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப் பேசிஎண் மற்றும் மின்னஞ்சல் முகவரி. கல்லூரி அளவிலானபோட்டிக்கு, முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.1. லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ. 50,000 பரிசாக வழங்கப்படும். பள்ளி அளவிலானபோட்டிக்கு, முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.75,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 வழங்கப்படும்.

தமிழ் வழி: பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைகள்: essay.schools.tamil@auroville.org.in பள்ளி மாணவர்களுக்கான குறும்படங்கள்: film.schools.tamil@auroville.org.in கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைகள்: essay.college.tamil@auroville.org.in கல்லூரி மாணவர்களுக்கான குறும்படங்கள்: film.college.tamil@auroville.org.in என்ற இணைய தளத்தில் அனுப்ப வேண்டும். ஆங்கில வழி: பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைகள்: essay.schools.english@auroville.org.in பள்ளி மாணவர்களுக்கான குறும்படங்கள்: film.schools.english@auroville.org.in கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைகள்: essay.college.english@auroville.org.in கல்லூரி மாணவர்களுக்கான குறும்படங்கள்: film.college.english@auroville.org.in என்ற இணைய தளத்தில் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: