பெரியகுளத்தில் சிறுத்தை கொலை? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்தப்படும்; வனத்துறை ரேஞ்சர் தகவல்

பெரியகுளம்:  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. அந்த இடம் ஓபிஎஸ்சின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டமாகும். இந்த தோட்டத்தில் ஆட்டுமந்தை அமைத்துள்ள பூதிபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(35) என்பவரிடம் வனத்துறையினர் விசாரித்தனர். அவர் அமைத்திருந்த ஆட்டுக்கிடையில் 2 ஆடுகள், சிறுத்தைக்கு பலியானது.

இதனால் சோலார் மின்வேலியில் சுருக்கு கம்பி அமைத்து சிறுத்தை கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர். இதுகுறித்து ரேஞ்சர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்களான தேனி எம்பி ரவீந்திரநாத், மற்றும் காளீஸ்வரன் தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: