மதிமுக துணை பொதுசெயலாளரை கண்டித்து காஞ்சிபுரம் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி தனது முகநூல் பக்கத்தில் தான் கடந்த 28 ஆண்டு காலமாக மதிமுகவில் நீடித்து வருவதால் இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமை கழகத்திற்கு தெரிவித்திருந்தார். இதற்கு வைகோ உடனடியாக அலைபேசியில் பேசி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டு மதிமுக வலை பக்கத்தில் அவர் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநில துணை பொதுச்செயலாளர் மு.து.ராஜேந்திரன் என்பவர் இதற்கு எதிர் பதிலை பதிவு செய்திருந்தார்.

இது கண்ணிய குறைவாக இருப்பதாக கூறி அதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, செயலாளர் சா.மகேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, இராவணன், பாஸ்கரன், முச்சந்தி தலைமை செயற்குழு உறுப்பினர் அருள், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் ராமானுஜம், மாநில நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள்,  நகரம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள்,  பொதுக்குழு உறுப்பினர்கள் என 28 பேர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி கட்சிப் பதவிகளை மட்டும் ராஜினாமா செய்வதாகவும், தொடர்ந்து மதிமுக வாழ்நாள் உறுப்பினராக செயல்படுவதாக தெரிவித்தனர்.

Related Stories: