ஆர்எஸ்எஸ் பேரணிக்கான அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

சென்னை:ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், தாமோதரன், கலைப் பிரிவு மாநில தலைவர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, மயிலை தரணி, மலர்கொடி, மயிலை அசோக் குமார், தளபதி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: உலகம் போற்றக்கூடிய ஒரு நடிகர் சிவாஜி கணேசன். உலகத்தில் எந்த ஒரு நடிகரும் அவருக்கு இணை இல்லை. எந்த வகையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கிறார்கள் என்று புரியவில்லை.  நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டாலும் சட்ட ஒழுங்கு என்பது மாநிலத்தின் கடமை. மீண்டும் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: