×

தமிழகத்தில் இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது; தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் நடைபெறவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
02.10.2022 (இன்று) அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு:
கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும். 2020 - 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 பேருக்கு மேல் கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உரிமை உண்டு.

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல் தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு. கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு கிராம சபை கூட்டம் தெரிவித்தும், நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவும்.

மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும். கிராம மக்கள் சொல்லும் தீர்மானத்தை பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது. தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்றால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் தனி பிரிவு எண் : 044 25672345, 044 25672283, 9443146857. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Gram Sabha ,Chief Secretary , In Tamil Nadu, Gram Sabha meetings are being held today in all panchayats; Chief Secretary Proclamation
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...