பெண் நீதிபதி வழக்கு இம்ரானுக்கு கைது வாரண்ட்

கராச்சி: பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெண் நீதிபதி ஒருவரையும் 2 போலீஸ் அதிகாரிகளையும் மிரட்டும் வகையில் பேசினார். இதுதொடர்பாக பெண் நீதிபதி அளித்த புகாரின் பேரில் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக இம்ரான் மன்னிப்பு கோரினார். மேலும், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டேன்’ என கூறியிருந்தார். இந்நிலையில், இஸ்லாமாபாத் நீதிமன்றம் இந்த வழக்கில் இம்ரானுக்கு நேற்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இவ்வழக்கில் இம்ரான் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

Related Stories: