கேரள முதல்வர் பினராயி விஜயன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம்; இன்று இரவு புறப்படுகின்றார்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் 10 நாள் ஐரோப்பிய நாட்டு சுற்றுப் பயணத்திற்காக இன்று புறப்படுகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் சிவன் குட்டி, ராஜீவ், அப்து ரகுமான் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். இன்று இரவு பினராயி விஜயன், அமைச்சர் சிவன்குட்டி மற்றும் தலைமைச் செயலாளர் ஜோய் ஆகியோர் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு டெல்லி வழியாக பின்லாந்து செல்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து இருவரும் நார்வே நாட்டுக்கு செல்கின்றனர். அப்போது அவர்களுடன் அமைச்சர் ராஜீவ் மற்றும் அப்து ரகுமான் ஆகியோர் இணைகின்றனர். இதன்பின் இவர்கள் இங்கிலாந்துக்கு செல்கின்றனர். அப்போது அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்களுடன் இணைந்து கொள்கிறார். ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அனைவரும் அக்டோபர் 12ம் தேதி கேரளா திரும்புகின்றனர்.

Related Stories: