பாம்பன் ரயில் பாலம் வலுவாக உள்ளது: ரயில்வே வாரிய நிர்வாக இயக்குனர் தகவல்

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலம் வலுவாக உள்ளதாகவும், புதிய பாலம் கட்டுமான பணி விரைவில் முடிவடையும் என ரயில்வே வாரிய நிர்வாக இயக்குனர் விகாஷ்குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்திற்கு நேற்று வந்த ரயில்வே வாரிய நிர்வாக இயக்குனர் விகாஷ்குமார் ஜெயின் (சிவில்)  ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து பாம்பன் சென்றவர் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரயில் பாலத்தை பார்வையிட்டதுடன், பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரட்டை வழித்தட அகல ரயில் பாலத்தில் நடந்து வரும் பணிகளையும் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். பின்னர் அவர் கூறும்போது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரயில் பாலம் வலுவாக உள்ளதாகவும், புதிய ரயில் பாலத்தின் பணிகள் விரைவில் முடிவடையும் என்றார்.

Related Stories: