×

டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன ரோபோவை அமெரிக்காவில் அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்: அலுவலகம், வீட்டு வேலைகளை செய்யுமாம்..!!

கலிபோர்னியா: பிரபல டெஸ்லா வாகன தயாரிப்பின் நிறுவன தலைவரான எலான் மஸ்க், தனது நிறுவனம் தயாரிப்பான அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தாலோ ஆல்ட்ரோ என்ற இடத்தில் ஏ.இ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், ஆப்டிமஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நவீன ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் அறிமுகம் செய்ததும் மேடையில் அமர்ந்திருந்த ஆப்டிமஸ்  ரோபோ பார்வையாளர்களை நோக்கி கையசைத்ததை அடுத்து அரங்கத்தில் கரவொலி எழுந்தது.

தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், ஆப்டிமஸ் ரோபோவின் சிறப்பு இயல்புகளை விவரித்தார். மிகவும் மலிவான விலையில், அதிக திறன்கள் கொண்ட ரோபோக்களை தயாரிக்கும் தனது கனவு, இதன் மூலம் நினைவாகி இருப்பதாக அவர் கூறினார். ஆப்டிமஸ் ரோபோ அலுவலகம், வீட்டு வேலைகளை செய்யும். இந்திய மதிப்பீட்டில் 16 லட்சம் ரூபாய்க்கு விற்க மஸ்க் முடிவு செய்திருக்கிறார்.

Tags : Elon Musk ,Tesla ,United States , Tesla, Robot, Elon Musk
× RELATED பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான...