பாகிஸ்தான் நடிகருடன் உறவு; நட்பு தான் டேட்டிங் கிடையாது: அமீஷா படேல் ஓபன் டாக்

மும்பை: பாகிஸ்தான் நடிகருடன் நட்பு மட்டுமே உள்ளது என்றும், தங்களுக்குள் டேட்டிங் கிடையாது என்று நடிகை அமீஷா படேல் கூறினார். பாலிவுட் நடிகை அமீஷா படேலும், பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாசும் திருமணமாகாமல் இருவரும் சேர்ந்து வாழ்வதாக சமீபகாலமாக தகவல்கள் வௌியாகின. ஆனால் இவர்களின் ‘டேட்டிங்’ குறித்து அதிகாரபூர்வமாக இருவரும் அறிவிக்கவில்லை. இதுகுறித்து அமீஷா படேல் வீடியோ பதிவில் கூறுகையில், ‘இம்ரான் அப்பாசுடன் எனக்கு நட்பு மட்டுமே உள்ளது. இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறுவது வதந்தி. அமெரிக்காவில் படிக்கும் காலத்தில் இருந்தே இம்ரான் அப்பாசை எனக்கு தெரியும்.

அதேபோல் இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு பாகிஸ்தான் நண்பர்களுடன் எனக்கு நட்பு உண்டு. எனது பாடலை இம்ரான் அப்பாஸ் விரும்பி கேட்கிறார். அதன் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் பஹ்ரைனில் சந்தித்துக் கொண்டோம். மற்றபடி எங்களுக்குள் எவ்வித உறவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: