புகழ்பெற்ற தாஜ்மஹாலை விட வெளிநாட்டினரின் முதல் சாய்ஸ் மாமல்லபுரம்

சென்னை: 2021-22ம் ஆண்டில் புகழ்பெற்ற தாஜ்மஹாலை விட மாமல்லபுரம் அதிக வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. கொரோனா காலத்துக்கு பிறகு சுற்றுலாத்துறை மீண்டும் இயங்க தொடங்கியது. அதில் தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் வெளிநாட்டு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான நினைவுச் சின்னங்களை பார்வையிடும் பார்வையாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி சுமார் 1,44,984 வெளிநாட்டினர் மாமல்லபுரத்தின் நினைவுச் சின்னங்களை பார்வையிட்டுள்ளனர். 38,922 வெளிநாட்டினர் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். மாமல்லபுரம் 45.5% பார்வையாளர்கள் பெற்றுள்ளது. தாஜ்மஹால் 12.21% பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

இந்நிலையில் டெல்லி அருகே ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை  விட சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் வெளிநாட்டு பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் ஐந்து நினைவுச் சின்னங்களான மாமல்லபுரம், சலுவன்குப்பத்தில் உள்ள புலிகுகை பாறை கோயில், செஞ்சி கோட்டை, திருமயத்தில் உள்ள கோட்டை அருங்காட்சியகம், சித்தன்னவாசலில் உள்ள பாறையில் வெட்டப்பட்ட ஜெயின் கோயில் ஆகியவை நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்த்த முதல் 10 நினைவுச் சின்னங்கள் ஆகும். தமிழ்நாடு தற்போது இந்தியாவின் பாரம்பரிய தலைநகரமாக மாறியுள்ளது. வெளிநாட்டினர் அதிகம் பார்வையிடும் முக்கிய இடமாக மாமல்லபுரம் உள்ளது. மாமல்லபுரத்தை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: