பதிவுத்துறை சீர்திருத்த நடவடிக்கைகளை அறிய காஷ்மீரில் இருந்து 4 பேர் குழு தமிழகம் வருகிறது

சென்னை: தமிழ்நாட்டு பதிவுத்துறையில் புகுத்தப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்து அறியும் பொருட்டு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஒரு குழு அனுப்பப்படுகிறது. தமிழக அரசு பதிவுத்துறையில் சமீப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல புதிய திட்டங்கள் குறித்து இந்த குழு அறிந்து கொள்ள இருக்கிறது. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 28ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட உண்மையான நில உடமையாளர்களுக்கு அவர்களது நிலத்தை மீட்டுத் தரும் வகையில் மோசடி ஆவணப்பதிவினை  ரத்து செய்யும் அதிகார நடைமுறை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. இத்தகைய சீர்திருத்தங்களை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ள வருகை தரும் முதல் மாநிலமான காஷ்மீர் மாநிலத்தில் இருந்து நான்கு அதிகாரிகள் 10.10.2022 முதல் 15.10.2022 வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பத்திரப்பதிவு துறையில் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள இருக்கிறார்கள். அதன்படி, நட்டேஷ் கல்சோத்ரா (ஜம்மு காஷ்மீர் மாவட்ட பதிவாளர்), சுகில் அகமத் லான் (துணை பதிவாளர்), அபோர்ஷா பனோ (துணை பதிவாளர்), சவிதா சவுகன் (துணை பதிவாளர்) ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை வருகிறார்கள்.

Related Stories: