தாஜ்மகாலை விட மாமல்லபுரத்துக்கு அதிகம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல்

சென்னை : 2021-ம் ஆண்டில் தாஜ்மகாலை விட மாமல்லபுரத்துக்கு அதிகம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்ததாக ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-2022ம் ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1,44,984 பேர் மாமல்லபுரம் சிற்பங்களை காண வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தாஜ்மகாலுக்கு வெறும் 38,922 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்துக்கு வந்த பயணிகளை விட தாஜ்மகாலுக்கு சென்ற பயணிகள் எண்ணிக்கள் 33 சதவிதம் குறைவாக இருந்து உள்ளது. அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்த இடங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் சாளுவன்குப்பம், புலிக்குடைவரை, 5-வது இடத்தில் செஞ்சி கோட்டை உள்ளன. உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டிற்கு 14 கோடி உள்நாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதேபோல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்த மாநிலங்கள் பட்டியலிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் தாஜ்மகாலை கடந்த பல்லவ பூமி அடையாளங்களை உலகம் அங்கீகரிக்கத் தொடங்கி இருப்பது நமக்கு பெருமை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், முகலாயர்களின் கட்டிட கலையை விட்ட பல்லவர்களின் கட்டிடக்கலை சிறப்பு மிக்கது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மாமல்லபுரத்தின் சிறப்புகளை உலகம் அறிந்து கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்ட சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: