×

டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முப்படை தளபதி அனில் சவுகான்...

புதுடெல்லி: ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அனில் சவுகானுக்கு முப்படைகளின் தலைமை தளபதி பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இதற்கு முன்பு பிபின் ராவத் பணியமர்த்தப்பட்டார். அவருக்கு அடுத்தாக, ராணுவ தளபதியாக இருந்த எம்.எம். நரவனே புதிய தலைமை தளபதி ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் 62 வயதை பூர்த்தி அடையாதவராக இருந்தால் லெப்டினெட் ஜெனரல் அல்லது ஜெனரல் பணி நிலையில் ஓய்வு பெற்றிருந்தால் அவரை முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கலாம் என கடந்த ஜுன் மாதம் விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

முப்படைகளின் அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் அவரது தந்தை சுரேந்திர சிங் சவுகானுடன் டெல்லியில் தேசிய போர் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமை ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுதாரி, ஏர் மார்ஷல் பிஆர் கிருஷ்ணா மற்றும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ்என் கோர்மேட் ஆகியோருடன் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பேசினார்.

இவர் முப்படைகளின் தலைமை தளபதியாக மட்டுமின்றி பாதுகாப்பு மந்திரியின் ராணுவ ஆலோசகர், அணு ஆயுதக்கட்டளை ஆணையத்தின் ஆலோசகர் போன்ற பொறுப்புகளையும் வகிப்பார். அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியில் முப்படை தலைமை தளபதியின் தேவை அவசியம் என கருதி இந்த நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 


Tags : Tri-Army ,Commander ,Anil Chauhan ,Delhi , Tri-Army Commander Anil Chauhan pays respects at war memorial in Delhi
× RELATED இந்திய விமான படையின் முன்னாள் தலைமை...