×

சர்வதேச விண்வெளிகூட்டமைப்பில் பதவி: இஸ்ரோ விஞ்ஞானிக்கு கவுரவம்

பெங்களூரு: இஸ்ரோ விஞ்ஞானி அனில் குமார் தற்போது இஸ்ரோவின் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் துணை தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு, கடந்த 1951ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 433 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இஸ்ரோவின் டிவிட்டர் பதிவில்,  ‘இஸ்ரோ விஞ்ஞானி அனில் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளது சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும், இஸ்ரோவின் விண்வெளி முயற்சிகளுக்கான அங்கீகாரமாகும்,’ என கூறப்பட்டுள்ளது. 


Tags : International Space Agency ,ISRO , Post in International Space Agency: ISRO Scientist Honored
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...