வேடந்தாங்கலில் உள்ள மருந்து கம்பெனிக்கு ரூ10 கோடி அபராதம்: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: வேடந்தாங்கலில் உள்ள மருந்து தயாரிக்கும் கம்பெனிக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம் ஆர்  தியாகராஜன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 2020ம் ஆண்டு  ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சன் பார்மா ஆலை இயங்கி வருவதால் நடவடிக்கை  எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டன. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி பெறாததால் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம்.

ஆலையின் விரிவாக்கத்திற்கு மார்ச் 2022ம் ஆண்டில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனு தென்மண்டல தேசிய  பசுமைத் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வில் நிலுவையில் இருப்பதால் ஆலையை மூடுவது குறித்து இந்த மனுவில் உத்தரவிடவில்லை. மேலும், சன் பார்மா நிறுவனத்துக்கு ரூ10 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: