×

உக்ரைனின் 4 பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு: முறைப்படி புடின் இன்று அறிவிக்கிறார்

மாஸ்கோ: உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் புடின் இன்று முறைப்படி வெளியிடுகிறார். நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது 7 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.  ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் ரஷ்ய படைகளின் வசம் இருக்கும் கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு கடந்த 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. இது குறித்து ரஷ்யா நியமித்த தேர்தல் அதிகாரி கூறுகையில், ‘‘ஜாபோர்ஜியாவில் உள்ள 93 சதவீத வாக்காளர்கள், கெர்சனில் 87 சதவீதம், லுஹன்ஸ்க்கில் 98 சதவீதம், டொனட்ஸ்க்கில் 99 சதவீத மக்களும் வாக்கு செலுத்தினர். பெருவாரியான மக்கள் தங்கள் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கவே விரும்புகின்றனர். எனவே, இந்த பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க ரஷ்ய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்றார். இதைதொடர்ந்து 4 பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைப்பது  தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புடின் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

* எரிவாயு குழாயில் நான்காவது கசிவு
ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு பால்டிக் கடலுக்கு அடியில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் சில நாட்களுக்கு முன் கசிவு ஏற்பட்டது. ‘நார்ட் ஸ்ட்ரீம்’ எனப்படும்  இந்த குழாய்களில் ஏற்கனவே 3 இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், 4வதாக சுவீடனுக்கு அருகே மேலும் ஒரு  இடத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது. டென்மார்க், சுவீடனில் தலா 2 கசிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில், வெளிநாட்டு அரசுகளின் சதி இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து விவாதிக்க, ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது.

* காஸ், ஆயுதங்களுக்கு அமெரிக்கா தடை
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யா நடத்திய வாக்கெடுப்புகள் போலியானவை என்று அமெரிக்கா குற்றம் சாட்டிள்ளது.ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை கொண்டு வருவது பற்றி அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.குறிப்பாக எண்ணெய், காஸ் ஏற்றுமதி மற்றும் ஆயுத நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ரஷ்யா ஆயுதங்களை பெறமுடியாத அளவில் தடை விதிக்கப்பட உள்ளது என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ukraine ,Russia ,Putin , 4 parts of Ukraine annexed by Russia: formally announced by Putin today
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...