தேசிய விளையாட்டுப் போட்டி கபடி அரையிறுதிக்கு தமிழக மகளிர் தகுதி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் உட்பட 6 நகரங்களில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டி நேற்று தொடங்கியது. ஏற்கனவே தொடங்கிய கபடிப் போட்டியில்  தலா 8ஆடவர், மகளிர் மாநில அணிகள் களம் கண்டன.

ஆடவர்களுக்கான ஏ பிரிவில் விளையாடிய தமிழ்நாடு ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றிப் பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேநேரத்தில் மகளிருக்கான பி பிரிவில் விளையாடிய தமிழ்நாடு அணி  லீக் சுற்றில் விளையாடிய 3 ஆட்டங்களில் 2ல் வெற்றிப் பெற்றது. அதனால் பி பிரிவில் 2வது இடம் பிடித்த தமிழ்நாடு மகளிர் அரையிறுதிக்கு முன்னேறினர். இன்று மாலை 6 மணிக்கு  நடைபெறும் முதல் அரையிறுதியில் மகாராஷ்டிரா-தமிழ்நாடு அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 2வது அரையிறுதியில் அரியானா-இமாச்சல் பிரதேசம் அணிகள் களம் காணுகின்றன. நாளை இரவு 7 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறும்.

தமிழ்நாடு அணி: பவித்ரா இந்தரஜித், சத்திய பிரியா, ஆர்.ஆஷா, கே.ஸ்வேதா, பி.சித்ரா, டீ.மாலா. டி.வினோதினி, எம்.ராஜேஸ்வரி, டீ.சந்தியா, கே.தீபா, கே.அனிதா, எஸ்.காவியா.

Related Stories: