×

சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம். துரைசாமி, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராகப் பதவி ஏற்பு

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் நீதிபதி எம். துரைசாமி. இவரை, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது.

புதிய பதவியை நீதிபதி எம்.துரைசாமி செவ்வாய்க்கிழமை காலை ஏற்றுக் கொண்டு வழக்குகளை விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், ரியல் எஸ்டேட் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணையத்தை பொதுமக்கள் அணுக வேண்டும் என்றார்.அந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்குகளை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.

Tags : Chennai Ikord ,Chief Justice ,M. Duraisamy ,Tamil Nadu ,Real Estate Appeal Tribunal , Retired Chief Justice of Chennai High Court M. Duraisamy, has accepted the post as Chairman of the Tamil Nadu Real Estate Appellate Tribunal
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...