தருமபுரம் ஆதீனத்தின் சொத்தை மீட்ககோரி வழக்கு: திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ஆஜராக ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: திருச்செந்தூர் கோயில் அருகே ஆக்கிரமித்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்தை மீட்க நடவடிக்கை கோரிய வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்தை ஆக்கிரமித்து கொண்டு வெளியேற மறுக்கின்றனர் என்று மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: