×

பிஎஃப்ஐ அமைப்பிற்கு ஒன்றிய அரசு தடை விதித்ததை தொடந்து அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பக்கம் நீக்கம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஒன்றிய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்ததை தொடர்ந்து தற்போது அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.

இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இதனை தொடரந்து, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகளுக்கு இந்தியாவில்  5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து பி.எப்.ஐ.அமைப்பின் இணையதள பக்கம் முடக்கப்பட்டது.இந்த நிலையில், ஒன்றிய அரசின் தடையை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் பி.எப்.ஐ. அமைப்பின் ட்விட்டர் பக்கத்தை நீக்கியது.


Tags : Union government ,BFI ,Twitter , BFI Organization, Union Govt Ban, Twitter Page Deleted
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...