×

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி: பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் பொறுமை இழந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் விளைவாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மையமாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய அரசு அதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மின்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி வில்லியனூர் தொகுதியை சேர்ந்த உத்திரவாகினி பேட்டை, அம்பேத்கார் நகர், பீமாராவ் நகர் மற்றும் எஸ்.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

குறைந்த மின்னழுத்தம் காரணமாக குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளக்கினார். நேற்று இரவு வரை மின்சார பிரச்னை சரிசெய்யப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வில்லியனூர்-ஒதியம்பட்டு சாலையில் இரண்டு இடங்களில் 3 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வந்தவழியே வந்த வாகனங்கள் மீது கற்களை வீசியதால் பரபரப்பு நிலவியது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதே போல மத்தியார் பேட்டை, லாஸ்பேட்டை, வில்லியனூர்  உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.


Tags : Puducherry , Puducherry, power industry employees go on strike, public suffering, roads blocked
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...