×

குழாய் இணைக்கும் பணி செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நாளை நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நாளை நிறுத்தப்படுவதாக சென்னைக் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் 2000 மி.மீ உந்து குழாயில் 500 மி.மீ குழாயினை இணைக்கும் பணிகள் நாளை (30ம்தேதி) காலை 10 மணி முதல் இரவு 10மணி வரை நடக்கிறது.
 இதனால் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரேற்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

எனவே, அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள சம்பந்தப்பட்ட பகுதி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

பகுதி பகுதி-07க்குட்பட்டவர்கள் 81449 30907 என்ற எண்ணிலும், பகுதி-08க்குட்பட்டவர்கள் 81449 30908 என்ற எண்ணிலும், பகுதி-09க்குட்பட்டவர்கள் 81449 30909 என்ற எண்ணிலும், பகுதி-10க்குட்பட்டவர்கள் 81449 30910 என்ற எண்ணிலும், பகுதி-11க்குட்பட்டவர்கள் 81449 30911 என்ற எண்ணிலும், பகுதி-12க்குட்பட்டவர்கள் 81449 30912 என்ற எண்ணிலும், பகுதி-13க்குட்பட்டவர்கள் 81449 30913 என்ற எண்ணிலும், பகுதி-14க்குட்பட்டவர்கள் 81449 30914 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Sembarambakkam ,Chennai Water Board , Pipeline work Sembarambakkam water treatment plant work to stop tomorrow: Chennai Water Board announcement
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...