காங். தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங், கார்கே போட்டியிட விருப்பம்: சோனியாவுடன் அந்தோணி சந்திப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இதில்ல, சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. இவர்களின் ஆதரவைப் பெற்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கே,  தலைவர் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், கட்சி தலைவர் பதவிக்காக, முதல்வர் பதவியை விட்டுத் தர அவர் மறுத்து வருகிறார். குறிப்பாக,  தனது எதிர்ப்பாளரான சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி சென்றுவிடக் கூடாது என்று அவர் கருதுகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை கெலாட் நேற்று டெல்லியில் சந்திந்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் அவருடைய டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்று அவர் சோனியாவை சந்திப்பார் என தெரிகிறது. தலைவர் தேர்தலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சசிதரூர் களமிறங்குவது ஏற்கனவே உறுதியாகி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங்கும், மல்லிகார்ஜுன கார்கேவும் கூட, தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே. அந்தோணி, டெல்லியில் சோனியாவை நேற்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Related Stories: