முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் நியமனம்

புதுடெல்லி: நாட்டின் முப்படை புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவம், விமானம் மற்றும் கடற்படைக்கு தனித் தனியாக தளபதிகள் உள்ள நிலையில், முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டது. இதன்படி, நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றார். இவர் கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அதன் பிறகு, கடந்த 9 மாதங்களாக இப்பதவி காலியாக உள்ள நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனில் சவுகான் ராணுவத் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவமிக்கவர்.

Related Stories: