×

புது லுக்கிற்கு மாறினார் கமல்

சென்னை: இந்தியன் 2 படத்துக்காக புதிய தோற்றத்துக்கு மாறியுள்ளார் கமல்ஹாசன். விக்ரம் படத்துக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாடியுடன் காணப்பட்டார் கமல்ஹாசன். விக்ரம் படம் வெளியான பிறகு பழையபடி முறுக்கு மீசை கெட்டப்பிற்கு அவர் மாறினார். இந்நிலையில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் சென்னையிலும் திருப்பதியிலும் இயக்குனர் ஷங்கர் படமாக்கினார்.

இதில் தாடி, மீசை இல்லாத வயதான சேனாதிபதி என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடிக்கிறார். முதல் பாகத்திலும் அவர் இதுபோல்தான் நடித்திருந்தார். இதனால், தனது மீசையை நீக்கியிருக்கிறார் கமல். இப்போது தாடி, மீசை இல்லாத தோற்றத்துக்கு கமல்ஹாசன் மாறியுள்ளார். இந்த புகைப்படமும் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.


Tags : Kamal , Kamal changed to a new look
× RELATED குஜராத், ஆந்திரா, பீகார் மாநிலங்களில்...