×

ரீமிக்ஸ் செய்து என் பாடலை சிதைக்காதீங்க: ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

சென்னை: ரீமிக்ஸ் பெயரில் என் பாடல்கள் சிதைக்கப்படுவதை பார்க்கிறேன் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மான் இசையமைத்த பல பாடல்களை வடநாட்டில் ரீமிக்ஸ் செய்து வருகிறார்கள். குறிப்பாக அவரது இந்தி பாடல்களை அதிகளவில் ரீமிக்ஸ் செய்கிறார்கள். இது பற்றி ரஹ்மானிடம் கேட்டபோது, அவர் கூறியது: எனது பாடல்கள் பெருமளவில் ரீமிக்ஸ் செய்வதை பார்க்கிறேன். ஒவ்வொருமுறையும் அது சிதைக்கப்படுகிறதோ என நினைக்கிறேன். நானும் பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். ஒரிஜினல் அழகு கெடாமல், ஒரிஜினல் தன்மை மாறாமல் அதை ரீமிக்ஸ் செய்துள்ளேன். சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களும் அதை பாராட்டியுள்ளனர்.

அதைத்தான் நான் எனது இசைக்கும் எதிர்பார்ப்பேன். ஆனால் சில பாடல்களை கேட்கும்போது, எனது ஒரிஜினல் பாடலை போல் இல்லாதது குறையாக தெரியும். அதனால்தான் அவர்களை மட்டும் ஒரிஜினலை சிதைக்காமல் பார்த்துக்கொள்ள கேட்கிறேன். முடிந்தவரை ரீமிக்ஸ் என்பதை தவிர்க்கவே விரும்புகிறேன். அப்படி நான் அதிகம் செய்ததும் கிடையாது. காரணம், ஒரிஜினல் என்பதுதான் நிஜம். ரீமிக்ஸ் என்பது நிழல். அதனால் நிஜத்தில் பணியாற்றுவதே பிடித்தமான பணியாக இருக்கிறது. ரசிகர்களை எனது இசையால் மேலும் மகிழ்வித்துக் கொண்டே இருக்க விரும்புகிறேன். இறைவன் நாடினால் அது நடக்கும். இவ்வாறு ரஹ்மான் கூறியுள்ளார்.


Tags : AR ,Rahman , Don't Ruin My Song By Remixing: AR Rahman Requests
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தால் பணிநீக்கம் செய்யக்கூடாது: ஏ.ஆர்.ரஹ்மான்